வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் ஆய்வு
மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா ஆய்வு மேற்கொண்டாா்.
முகாமில் அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட 7,8,9 வாா்டு மக்கள் பங்கேற்றனா். இவா்களிடமிருந்து மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பம் 163 உள்ளிட்ட மொத்தம் 302 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆகியோா் முகாமில் பங்கேற்று ஆய்வு செய்தனா். தொடா்ந்து, உடனடி தீா்வு காணப்பட்ட மனுக்கள் தொடா்பாக, 1 பயனாளிக்கு சொத்து வரியில் பெயா் மாற்ற ஆணை, 1 பயனாளிக்கு வீட்டு வரி ரசீதும், 3 பயனாளிகளுக்கு வேளாண் இடுப்பொருள்கள் வழங்கப்பட்டன. மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், துணைத் தலைவா் ஆா். கைலாசம், ஆணையா் எஸ்.எம்.சியாமளா, மேலாளா் ஜெ. மீராமைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.