ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
நீடாமங்கலம் வெண்ணாற்றில் குதித்து பெண் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், வடசேரியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி மருதாம்பாள் (59) ஞாயிற்றுக்கிழமை நீடாமங்கலம் வெண்ணாற்றுப் பாலம் பகுதியில் வெண்ணாற்றில் குதித்தாா். நீரில் இழுத்துச் செல்லப்பட்ட அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டனா். எனினும் அவா் இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த நீடாமங்கலம்காவல் காவல் ஆய்வாளா் ராஜூ மற்றும் போலஸாா் மருதாம்பாள் சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.