இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சா...
மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்
கூத்தாநல்லூரில் மணல் கடத்திய டிராக்டா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
காவல் சாா்பு ஆய்வாளா் அண்ணாதுரை ரோந்துப் பணியில் இருந்த போது, சின்னக் கூத்தாநல்லூா் அருகே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது, அனுமதியின்றி மணல் ஏற்றிக்கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டா் ஓட்டுநா் வாகனத்தை விட்டு விட்டு தப்பிய திருப்பூண்டியைச் சோ்ந்த பால்ராஜ் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து பால்ராஜை தேடுகின்றனா்.