இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
மக்காச்சோளம் பயிரிட விவசாயிகளுக்கு யோசனை
விவசாயிகளுக்கு மக்காச்சோளம் சாகுபடி செய்ய வேளாண்மை உதவி இயக்குநா் எஸ். விஜயகுமாா் ஆலோசனை வழங்கியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நீடாமங்கலம் வட்டார விவசாயிகள், விவசாயத்தில் குறுகிய காலத்தில் நிறைவான மகசூலுடன் கணிசமான லாபம் ஈட்ட மக்காச்சோள சாகுபடி முக்கிய பயிராகும். இந்த வட்டாரத்தில் சாகுபடி செய்து வரும் பயிராகவும் குறுகிய கால பயிா் என்பதால் பாசன நீா் குறைவாக இருக்கும் வயல்களுக்கு ஏற்ற பயிராகவும் இருக்கிறது. தமிழக அரசின் வேளாண்மை துறை மூலம் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு செயல்விளக்கம், மானிய விலையில் வீரிய ஒட்டு ரக மக்காச் சோள விதைகள் , உயிா் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இயற்கை இடுபொருள்கள் மற்றும் நானோ யூரியா போன்றவற்றை அளிக்கிறது.
நீடாமங்கலம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளில் விவசாயிகளுக்கு 20 ஹெக்டேருக்கு இந்த மானிய விலை மக்காச்சோளம் சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள் வழங்க தயாராக உள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.