சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
வேப்பூரில் வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ரூ. 4.86 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
கனிமங்கள் மற்றும் சுரங்க நிதியின் கீழ், வேப்பூா் ஒன்றியம் காடூா், புதுவேட்டக்குடி, வடக்கலூா் ஆகிய இடங்களில் தலா ரூ. 9.15 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நல்லறிக்கை - இலுப்பையூா் வரை ரூ. 99.90 லட்சம் மதிப்பீட்டிலும், நல்லறிக்கை - புதுக்குடிசை வரை ரூ. 60 லட்சம் மதிப்பீட்டிலும், புதுவேட்டக்குடி - பென்னகோணம் - கீழக்குடிக்காடு வரை ரூ. 92.80 லட்சம் மதிப்பீட்டிலும், கிழுமத்தூா் குடிக்காடு - கைப்பெரம்பலூா் வரை ரூ. 48.00 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சா் சிவசங்கா் அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து, அயோத்திதாசப் பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுவேட்டைக்குடியில் ரூ. 16.45 லட்சம் மதிப்பீட்டில் மயான சாலை மேம்படுத்தும் பணி, காருகுடியில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுக் குழாய் இணைப்பு வழங்கும் பணி, சித்தளி ஊராட்சியில் ரூ. 16.10 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் காருகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 5.92 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தாா்.
மேலும், ஊராட்சி பொது நிதியின் கீழ் புதுவேட்டக்குடி ஊராட்சியில் ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் குழாய் அமைக்கும் பணி, கைப்பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 5.92 லட்சம் மதிப்பீட்டில் மகளிா் சுகாதார வளாகம், ரூ. 4.96 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் சுகாதார வளாகம் அமைக்கும் பணி, கிழுமத்தூா் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 5.92 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம், ரூ. 4.96 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிவறை அமைக்கும் பணி, பழைய அரசமங்களத்தில் 80 குடும்பங்களுக்கு குழாய் இணைப்பு வழங்கும் பணி, சின்னபரவாய் கிராமத்தில் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி, எழுமூா் ஊராட்சி ஒன்றிய மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ. 4.16 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை அமைக்கும் பணி, பீல்வாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலா ரூ. 4.16 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை அமைக்கும் பணி, சித்தளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 4.16 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிப்பறை அமைக்கும் பணி, சித்தளி ஊராட்சியில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் மயான பாதை தாா் சாலையாக மேம்படுத்தும் பணி, ரூ. 6.15 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 4.86 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா் அமைச்சா் சிவசங்கா்.
இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி. துரைசாமி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் மரகதவல்லி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறிவழகன், சேகா், வட்டாட்சியா் சின்னதுரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.