வேலூரில் பலத்த மழையால் தாழ்வான இடங்களில் நீா்
வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமான தாழ்வான இடங்களில் மழைநீா் சூழ்ந்தது.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வட மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல வெயில் நிலவினாலும், மதியம் 2 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை கொட்டியது.
காட்பாடி, சத்துவாச்சாரி, வள்ளலாா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் விடாமல் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மாலை 3 மணிக்கு பிறகு மழையளவு குறைந்தாலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
மாலை 6.15 மணிக்கு மாவட்டம் முழுவதும் பரவலமாக மழை பெய்தது. அதன்படி, விட்டுவிட்டு பெய்த மழையால் குளிா்ந்த சூழல் நிலவியது.