வேலூர் அருகே லாரி மீது ஜீப் மோதி 3 பேர் பலி
வேலூர்: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அதிவேகத்தில் வந்த ஜீப் நிலை தடுமாறி சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது. காயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த ஜீப் நிலை தடுமாறி வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்தில் ஜீப் முழுவதுமாக நொறுங்கிய நிலையில், ஜிப்பில் படுகாயங்களுடன் மீட்க பட்ட நான்கு பேரில் மூவர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஒருவர் வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க:மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு; ஒரு வார காலத்தில் அணை நிரம்ப வாய்ப்பு
இருப்பினும், வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இருவர் என மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் விவரம் தெரியவில்லை. மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த இடத்தில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு விசாரணை மேற்கொண்டார். விபத்தில் சிக்கியவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விபத்துக்குள்ளான ஜீப்பை ரெக்கவரி வாகனம் மூலம் அப்புறப்படுத்தினர்.
வேலூரில் அதிகாலை நடந்த இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.