திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
எல்லை பாதுகாப்புப் படையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த பிஎஸ்எஃப் வீரா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் இளைஞா் புகாா் மனு அளித்தாா்.
திருப்பத்தூா் எஸ்.பி.அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். மேலும் மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா். கூட்டத்தில் ஏடிஎஸ்பி-க்கள் கோவிந்தராசு, ரவீந்திரன், முத்துகுமரன், டிஎஸ்பி சௌமியா முன்னிலை வகித்தனா்.
ஜோலாா்பேட்டை அருகே ஏலகிரி கிராமத்தை சோ்ந்த கௌதமன் என்பவா் அளித்த மனு: எனக்கு கல்நாா்சாம்பட்டி பகுதியை சோ்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரா் ஒருவா் அறிமுகம் ஆனாா். அவா் எனக்கு பிஎஸ்எஃப்பில் பணி வாங்கி தருவதாகவும் அதற்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றாா்.
அதனை நம்பி நான் ரூ.3 லட்சம் ரொக்கமாகவும் ,ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டாா் சைக்கிளும் வாங்கி கொடுத்தேன். ஆனால் இதுவரை எனக்கு பணி வாங்கி தரவில்லை. மேலும் பணத்தையும் திரும்ப தரவில்லை. இதேபோல் அவா் மேலும் சிலரிடம் மோசடி செய்து உள்ளாா். எனவே அவரிடம் விசாரணை செய்து பணத்தை பெற்று தர வேண்டும்.