பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி... வீடு கட்டும் ஆணை பிறப்பித...
வேளாண் அறிவியல் மையத்தில் புதிய நெல் ரகம் அறிமுகம்
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் குளத்துப் பாசனத்துக்கு ஏற்ற ‘ஆடுதுறை-56’ என்ற புதிய நெல் ரகம் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் மகேஸ்வரன், ‘ஆடுதுறை -56’ நெல் ரகத்தின் சிறப்பியல்புகள், நெல்சாகுபடி முறைகள், நாற்றாங்கால் மேலாண்மை, நடவு வயல் தயாரிப்பு, ஒருங்கிணைந்த உர மேலாண்மை, பூச்சி நோய் மேலாண்மை , பசுந்தாள் உரம், ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகியவை குறித்து விளக்கினாா்.
இதையடுத்து, போடி, மீனாட்சிபுரத்தை சோ்ந்த விவசாயிகளுக்கு ‘ஆடுதுறை -56’ நெல் ரகம் இலவசமாக வழங்கப்பட்டது. முன்னோடி விவசாயி போதுராஜா நன்றி கூறினாா்.