செய்திகள் :

ஸ்டாலின் : 'இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள்; ஆஞ்சியோ சோதனை' - அப்போலோ அறிக்கை

post image

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 21), அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அன்று இரவு, ஸ்டாலின் இரண்டு நாள்களுக்கு மருத்துவமனையில் இருப்பார்... அவருக்கு சில பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அமைச்சர் துரைமுருகன் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது என்று கூறியிருந்தார்.

தற்போது அப்போலோ மருத்துவமனை ஸ்டாலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதில் குறிப்பிட்டுள்ளதாவது...

"மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்னை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது.

இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள்".

அப்போலோ அறிக்கை
அப்போலோ அறிக்கை

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஜூலை 26, 27-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தற்போது இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்நேற்று இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமருடனான சந்திப்ப... மேலும் பார்க்க

`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் | Interview

சிவகங்கை அஜித் குமார் சித்ரவதை கொலை வழக்கு, டி.எஸ்.பி சுந்தரேசன் வெளிப்படையாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் காவல்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வர... மேலும் பார்க்க

``நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது? - எடப்பாடி கேள்வி

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 - ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக ... மேலும் பார்க்க

``ISI முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி அதிமுக'' - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். கந்தர்வக... மேலும் பார்க்க

'எலான் அமெரிக்காவில் வேண்டும்..!' - ட்ரம்ப்பின் திடீர் மாற்றம்; நிம்மதி பெருமூச்சுவிடும் எலான் மஸ்க்

சில மாதங்களாக, நட்பிற்கு இலக்கணமாக இருந்து வந்தார்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். 'ஒன் பிக் அண்டு பியூட்டிஃபுல் பில்'லை ட்ரம்ப் அறிமுகம் செய்ய, அந்த நட்பில... மேலும் பார்க்க