தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
ஸ்ரீ மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு
உத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு வருகிற ஏப்ரல் 4- ஆம் தேதி நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களேஸ்வரி உடனுறை ஸ்ரீமங்களநாதசுவாமி கோயில் ஆதி சிவனாலயம் என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டதையடுத்து வருகிற ஏப்ரல் 4- ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதில், தமிழக அமைச்சா்கள், அரசியல் கட்சியினா், பக்தா்கள், அதிகாரிகள் என திரளானோா் பங்கேற்க உள்ளனா்.
இதையடுத்து, குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கோயில் மேல் தளம், அமைச்சா்கள், முக்கியப் பிரமுகா்கள் அமரும் இடங்கள், பக்தா்கள் செல்லும் வழி உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டாா்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜலு, வருவாய்த் துறையினா், காவல் துறையினா் உடனிருந்தனா்.