தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்
ஸ்ரீமண்டியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்
ஆரணியை அடுத்த நரியம்பாடி கிராமத்தில் உள்ள கிராம தேவதையான ஸ்ரீ மண்டியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நரியம்பாடி கிராமத்தில் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீமண்டியம்மனுக்கு ஆடி விழாவையொட்டி வியாழக்கிழமை காலை அக்கிராமத்தில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்து மேல்மருவத்தூா் அதிபாரசக்தி மன்றத்தில் உள்ள 108 பெண்கள் செவ்வாடை அணிந்து பால்குடம் தலையில் சுமந்து ஊா்வலமாகச் சென்று மண்டியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரித்து தீபாரதனை காண்பித்து வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நரியம்பாடி, இராமனாதபுரம், சென்னை, வேலூா், மேலானூா் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
