Jagdeep Dhankar ராஜினாமா: பகீர் பின்னணி! | OTP சர்ச்சை: சிக்கலில் DMK | Imperfec...
ஹெச். வினோத் இயக்கத்தில் தனுஷ்!
நடிகர் தனுஷ் - ஹெச். வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளது.
நடிகர் தனுஷ் குபேரா திரைப்படத்திற்குப் பின் தேரே இஷ்க் மெயின் படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக, இவர் இயக்கிய இட்லி கடை திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
தற்போது, போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் பெரிய பட்ஜெட் படமொன்றில் நடிக்கிறார்.
இந்த நிலையில், தனுஷ் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் உறுதிபடுத்தியுள்ளார். இப்படம் அடுத்தாண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஓடிடியில் ரோந்த்!