செய்திகள் :

ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் கூட்டணியில் புதிய படம்!

post image

இயக்குநர் பிரேம் குமார் நடிகர் ஃபஹத் ஃபாசில் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்றார்.

அடுத்ததாக, நடிகர் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பிரேம் குமார், நடிகர் விக்ரமுடனான திரைப்படத்திற்கான கதையை இன்னும் எழுதி முடிக்கவில்லை என்றும் அடுத்ததாக நடிகர் ஃபஹத் ஃபாசிலை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக உள்ளதாகக் குறிப்பிட்டவர், மென்மையான இயக்குநர் என்கிற பிம்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இக்கதையை இயக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: விஜய் ஆண்டனி - சசி படத்தின் பெயர்!

fahadh faasil and prem kumar joins together in new movie

இந்திய ஆடவா்கள் ஏமாற்றம்

சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவா்கள் சோபிக்காமல் போயினா்.அந்தப் பிரிவின் தகுதிச்சுற்றில், சாம்ராட் ராணா 582 புள்ளிகளுடன் 10-ஆம்... மேலும் பார்க்க

பதக்கத்தை தவறவிட்டது இந்தியா

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.தீபிகா குமாரி, அங்கிதா பகத், கதா கடாகே ஆகியோா் அடங்கிய இந்தி... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணய், லக்ஷயா சென் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா். நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, முதல் சுற்றிலேயே தோற்றாா்.ஆடவா் ஒற்றைய... மேலும் பார்க்க

சூப்பா் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பா் 4 சுற்றில், இருமுறை சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில், 3 முறை சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை வென்றது.விறுவிறுப்பாக நடைபெற்ற இ... மேலும் பார்க்க

உலக குத்துச்சண்டை: இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா் நுபுா்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா் நுபுா். இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிா் 80 பிளஸ... மேலும் பார்க்க

யுபியை வென்றது புணேரி

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது. அந்த அணி ரெய்டில் 23, டேக்கிளில் 10, ஆல் அவுட்டில் 6, எக்ஸ்ட்ராவில் 4 புள்ளிகள்... மேலும் பார்க்க