செய்திகள் :

அகதிகள் படகு கவிழ்ந்து இந்தியச் சிறுவன் உள்பட 3 பேர் பலி! 5 பேர் மீது வழக்கு!

post image

அமெரிக்காவின் கடல் பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 வயது இந்தியச் சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர்.

கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியேகோ நகரத்தின் அருகில் பசிபிக் கடல்பகுதியில் கடந்த மே.5 ஆம் தேதியன்று அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், மெக்ஸிகோவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என மொத்தம் 3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இதில், பலியான அந்த இந்தியச் சிறுவனின் 10 வயது தங்கை மாயமாகியுள்ளதாகவும் அவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து ஏற்பட்டபோது அந்தப் படகில் பயணித்தவர்களில் 9 பேர் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில் 10 வயது சிறுமியைத் தவிர மற்ற அனைவரும் அமெரிக்க கடலோரக் காவல் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மெக்ஸிகோவின் எல்லையிலிருந்து சுமார் 56 கி.மீ. தொலைவில் சிறிய ரக மீன்பிடி படகில் பயணித்த போது இந்த விபத்து அரங்கேறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த கடற்கரையில் அவர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவினுள் அழைத்து வர முயன்ற 2 மெக்ஸிகோ நாட்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரின் மீதும் உயிரிழப்பை ஏற்படுத்திய ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தக் குற்றத்திற்காக அவர்களுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும், அகதிகள் அனைவரும் கரைச் சேர்ந்த பின்னர் அவர்களை அழைத்துச் செல்ல காத்திருந்த மூன்று வாகன ஓட்டிகளும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரின் மீதும் அகதிகளை சட்டவிரோதமாகக் கொண்டு சென்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ல் சாண்டியாகோ கடற்கரையில் அகதிகள் பயணித்த படகு அங்கு நிலவிய கடூம் பனி மூட்டத்தினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் வான்வழித் தடம் மூடல்!

இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானார்கள். இலங்கையின் கதிர்காமத்தின் தெற்கு யாத்திரைத் தலத்திலிருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதல்களுக்கு 24 மணி நேரத்தில் 23 பேர் பலி

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 23 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். மத்திய காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாவில் கூடாரத்தின் மீது சனிக்கிழமை மாலையி... மேலும் பார்க்க

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெ... மேலும் பார்க்க

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் சனிக்கிழமை தெரிவித்ததாவது:நைஜீரியாவின் தென்கிழக்... மேலும் பார்க்க

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.உக்ரைன் தலைநகர் கீவுக்கு சனிக்கிழமை வந்திருந்த பிரிட்டன் பிரதமர் கியர... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சா் சஞ்சய் சேத் பங்கேற்பு

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகா் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். இந்தியா ச... மேலும் பார்க்க