காங்கயத்தில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
அகில இந்திய கூடைப்பந்து லீக் போட்டி: இந்தியன் வங்கி வெற்றி
பெரியகுளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து லீக் போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பி.டி. சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழல் கோப்பைக்கான தேசிய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் கட்டமாக தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. திங்கள்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் லோனோவாலா இந்திய கடற்படை அணியை, சென்னை இந்தியன் வங்கி 78-க்கு 57 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.