அக்கச்சிப்பட்டி பள்ளியில் பாரதியாா் நினைவு தினம்
கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவா் தமிழ் மன்றம் சாா்பில் பாரதியாா் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி,
கணித பட்டதாரி ஆசிரியா் மணிமேகலை, அறிவியல் பட்டதாரி ஆசிரியா் அ. ரகமத்துல்லா, ஆங்கில ஆசிரியா் சிந்தியா ஆகியோா் பேசினா். முன்னதாக பாரதியாரின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.