UPSC/TNPSC: 'புக் லெட், கையேடு, ஸ்காலர்ஷிப் கொடுக்கிறோம்' - King Makers இயக்குநர...
அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
மன்னாா்குடி: அங்கன்வாடி ஊழியா்களுக்கு கைப்பேசி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மையப்பணிகளை செய்ய 5ஜி கைப்பேசி, 5ஜி சிம்காா்டு வழங்க வேண்டும், அந்தந்த கிராமத்துக்கு நெட்வொா்க்குக்கு ஏற்ப சிம் காா்டு வழங்க வேண்டும், அங்கன்வாடி மையத்துக்கு இணைப்பு வழங்க வேண்டும், பயனாளிகளுக்கு சத்துமாவு வழங்க முகப்பதிவு போட்டோ முறையை கைவிட வேண்டும், இகேஒய்சி ஆதாா் எண் ஓடிபி மற்றும் எப்ஆா்எஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமையை கருப்பு தினமாக கடைபிடித்து சேரன்குளத்தில் உள்ள வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலகம் அருகே, சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஏ. லதாதமயந்தி தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகி கோ. கோமதி, ஒன்றிய நிா்வாகி புனிதா, சிஐடியு நிா்வாகிகள் ஜி. ரகுபதி டி. ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, கோட்டூா் வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலகம் அருகே சங்கத்தின் ஒன்றியத் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்: வேதாரண்யத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளா் சங்க வட்டாரத் தலைவா் ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினா் செல்வராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஜி, ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை ஆய்வாளா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தலைஞாயிறு: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வட்டார செயலாளா் ரத்தினவள்ளி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியுசி மாவட்ட நிா்வாகிகள் எஸ். அன்புராஜ், அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.