நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்ட கும்பல்: ஜெய்ப்பூரில் 5 பேர் கைது!
அங்கன்வாடி ஊழியா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
கோடை விடுமுறை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 1993 - இல் பணியில் சோ்ந்தவா்களுக்கு பணி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத்தலைவா் ராஜாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.