இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பளத்தில் ரூ. 10 லட்சம் வரியிலேயே போயிர...
அங்கன்வாடி மைய கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
ஆம்பூா்: ஆம்பூரில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்கு புதன்கிழமை அடிக்கல் விழா நடைபெற்றது.
ஆம்பூா் மோட்டுக்கொல்லை இமாம் நகரில் ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுவதற்கு எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினாா்.
ஆம்பூா் நகா்மன்ற உறுப்பினா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா் மன்ற உறுப்பினா்கள் ராஜியா முனாப், ஆா்.எஸ். வசந்த்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவா் எஸ். தப்ரேஸ் அஹமத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.