பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு ச...
அஜித்தா இது? நம்பமுடியாத அளவுக்கு மாற்றம்!
நடிகர் அஜித்குமார் நம்பமுடியாத அளவுக்கு உடல் எடையை குறைத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் அவரது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தற்போது, பார்சிலோனாவில் அஜித் கார் பந்தயத்திற்கான பயிற்சியில் இருக்கிறார்.
நடிகர் அஜித் குட் பேட் அக்லிக்காக 8 கிலோ வரை தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக தகவல் வெளியானது.
தற்போது கார் ரேசிங்ஸில் முழு கவனைத்தையும் செலுத்தும் அஜித்தின் புகைப்படங்கள் விடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும்.
இந்த நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
இந்தப் புகைப்படத்தை பகிரும் அஜித் ரசிகர்கள், “நம்பமுடியாத அளவுக்கு மாறியுள்ளார்” எனப் புகழ்ந்து வருகிறார்கள்.
Unbelievable Transformation From Thala #AjithKumar Sir
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 14, 2025
Just Look At The Fitness!! #GoodBadUglypic.twitter.com/g3RjgMgMsl