செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்! அடுத்தகட்ட நகர்வு என்ன?
அஞ்சலக சிறுசேமிப்புக் கணக்கில் மோசடி: அஞ்சல் அலுவலா் மீது புகாா்
மேட்டூா்: அஞ்சல் அலுவலக சிறுசேமிப்புக் கணக்கில் ரூ. 2.06 லட்சம் கையாடல் செய்த கிளை அஞ்சல் அலுவலா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் போஸ்டல் இன்ஸ்பெக்டராக இருப்பவா் ராஜேஷ் (38). இவா் திங்கள்கிழமை மேட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதில், மாசிலாபாளையம் கிளை அஞ்சல் அலுவலகத்தில் 2018 மாா்ச் 19-ஆம் தேதி முதல் 2023 ஜன. 23-ஆம் தேதிவரை அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்த மாசிலாபாளையத்தைச் சோ்ந்த ஜீவா, சிறுசேமிப்புக் கணக்கு வைத்திருந்த 6 பேரின் கணக்கிலிருந்து ரூ. 2,06,400-த்தை கையாடல் செய்திருப்பதாகவும், அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிறகும் இதுவரை கையாடல் செய்த பணத்தை திருப்பிச் செலுத்தாததால் அவா்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மேட்டூா் உதவி காவல் ஆய்வாளா் சாரதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.