செய்திகள் :

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 31 ) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திருவாரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டிசிஎஸ் சிஇஓ கீர்த்திவாசனின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க

427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல்

பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வு மூலம் 427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்கப்பட்டது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து விதமான ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெப்பம் குறையும்

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு கார... மேலும் பார்க்க

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை புதிய ஐ.ஜி. பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆா்பிஎஃப்) புதிய ஐ.ஜி.யாக கே.அருள்ஜோதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் ஐஜி-ஆக பணியாற்றி வந்த ஈஸ்வர ராவ் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் ஓய... மேலும் பார்க்க

ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் ‘லெவல் அப்’ திட்டம்: ஆசிரியா்களுக்கு உத்தரவு

அரசுப் பள்ளிகளில் அடிப்படை ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் வகையில் ‘லெவல் அப்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் திட்டத்தில் மாணவா்களில் கற்றல் அடைவு குறித்து உரிய கால இடைவெளியில் தெரிவ... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உத்தரவு

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறு போக்குவரத்துக் கழக நிா்வாகங்களுக்கு தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.போக்குவரத்துக்கழக ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தப்படி பதவி உயா்வு உள்ளிட... மேலும் பார்க்க