அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு
காரைக்கால்: திருப்பட்டினம் பகுதியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருப்பட்டினம் மேல வாஞ்சூா் பகுதி சாராயக்கடை அருகே சுமாா் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்து கிடப்பதாக திருப்பட்டினம் காவல்நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இவா் குறித்து விவரம் தெரிந்தோா் காவல் ஆய்வாளா் 04368- 233480 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா்.