அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
சாத்தூரில் சாலையோரத்தில் அடையாளம் தெரியாத காா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒத்தையால் பகுதியைச் சோ்ந்தவா் நவநீதிகிருஷ்ணன் (63). இந்தப் பகுதியில் கூலி வேலை செய்து வந்தாா். இவா் புதன்கிழமை அதிகாலை சாலையோரத்தில நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத காா் மோதியதில் நவநீதகிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவரை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், நவநீதகிருஷ்ணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.