மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!
அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லை உள்பட 3 இடங்களில் இன்றுமுதல் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா, ஹுசைன்வாலா மற்றும் சட்கி எல்லைகளில் கொடியிறக்க நிகழ்வு நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானுக்குள் புகுந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் நிலவி வந்தது.
தற்போது இரு நாடுகளும் மோதலை நிறுத்தியுள்ள நிலையில், இன்றுமுதல் மீண்டும் எல்லையில் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாற்றங்கள்
1959 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் கொடியிறக்க நிகழ்வில் இரு நாட்டு எல்லைக் கதவுகளும் திறக்கப்பட்டு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரரும், பாகிஸ்தான் ராணுவ வீரரும் கைக்குலுக்குவார்கள்.
இந்த நிலையில், இன்றுமுதல் கொடியிறக்க நிகழ்வில் எல்லைக் கதவுகள் திறக்கப்படாது என்றும், பாகிஸ்தான் வீரருடன் இந்திய வீரர் கைக்குலுக்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் நாளைமுதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.