செய்திகள் :

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: "திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை" - ராமதாஸ்

post image
சென்னை அண்ணா பல்கலைக்கழகக்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை விமர்சித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ராமதாஸ், ``சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை இரண்டு பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. சென்னையின் மையப்பகுதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வுதான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் படிக்கின்றனர். அனைத்து நுழைவு வாயில்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறிக் கொள்கிறது. அது உண்மை என்றால், அனைத்து காவலையும் மீறி மனித மிருகங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி?

தமிழகத்தையும், பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவார்கள்.

இது பெண் கல்விக்குப் பெருந்தடையாக மாறி விடாதா? தி.மு.க ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையைக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரைப் படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதற்கு ஏதேனும் காரணத்தைக் கூறி சிக்கலைத் திசை திருப்புவதற்குத் தான் தி.மு.க அரசு முயல்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ராமதாஸ் , ஸ்டாலின்

கொலை - கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள், தி.மு.க-வுக்கு ஆதரவாக இருந்து கொண்டு தெரிந்தே குற்றங்களைச் செய்பவர்கள் போன்றோர்தான் பாதுகாப்பாக நடமாட முடிகிறதே தவிர, அப்பாவிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாட்டில் நடப்பவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் தக்க தண்டனையை தி.மு.க அரசுக்கு மக்கள் அளிப்பார்கள்." என்று பதிவிட்டிருக்கிறார்

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

"செருப்பு போடமாட்டேன்.. 6 சவுக்கடி.. 48 நாள்கள் விரதம்..." - சபதமெடுத்த அண்ணாமலை; காரணம் என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோட்டூர்புரத்தைச் சேர்ந்த... மேலும் பார்க்க

Greenland : ட்ரம்ப்பின் அடுத்த ‘டார்கெட்’... கிரீன்லாந்தை அமெரிக்கா ‘கட்டம்’ கட்டுவது ஏன்?

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் - ரஷ்யா போர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரச்னைகளில் இருந்து அமெரிக்காவை விலகி இருக்கச் செய்வது, வெளிநாட்டு வர்த்தக நட்பு நாடுகள் மீதான வரிக... மேலும் பார்க்க

'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்..!

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருந்தது. ஆனால் சமீபகாலமா... மேலும் பார்க்க

"தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் மத்தியில்..." - நல்லக்கண்ணுவை வாழ்த்திய விஜய்

சுதந்திரப் போராட்ட வீரர், கம்யூனிச தோழர், ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒலிக்கும் உரிமைக் குரல் என தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெரும் தலைவராய் வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாளான இன்று அ... மேலும் பார்க்க

'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்' - நான்கு முனை போட்டியில் பவன்!

யாருக்கு சீட்?காலியான ஈரோடு கிழக்கு...கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக திருமகன் ஈவேரா வெற்றிபெற்றார். இவர் கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இத... மேலும் பார்க்க

இரா.நல்லக்கண்ணு: ராம பக்தர் மகன், கோடி ரூபாயை வேண்டாமென்ற மனசு; நூற்றாண்டு காணும் தோழர்

தற்போதைய தமிழகத்தின் ஒரே எளிமையான அரசியல்வாதி இரா.நல்லகண்ணுவுக்கு இன்று நூறாவது பிறந்த நாள். அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை லட்சியத்தில் உறுதி என்னும் முழக்கங்களை பல அரசியலவாதிகள் எழுப்பக்கூடும்... மேலும் பார்க்க