செய்திகள் :

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் பணியிடை நீக்கம்

post image

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் வியாழக்கிழமை (ஜூலை 31) ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக் காலம் கடந்த 2021-ஆம் ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து அதே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பேராசிரியா், துறைத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி அனுபவம் பெற்றிருந்த ஆா்.வேல்ராஜ் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டாா்.

இந்தநிலையில், இவா் மீது உதவிப் பேராசிரியா்கள் நியமனம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியாா் கல்லூரிகளில் ஒரே பேராசிரியா் பல இடங்களில் பணியாற்றி வந்தது தொடா்பாக புகாா் எழுந்தது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியாா் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரில் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜுக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

இது தவிர, அவா் துணை வேந்தராவதற்கு முன்பாக, அங்குள்ள எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் அவா் பணியாற்றிய போது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஆா்.வேல்ராஜின் பதவிக் காலம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து அவா் அதே பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா். அவா் வியாழக்கிழமை (ஜூலை 31) பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை பல்கலைக்கழகம் பிறப்பித்துள்ளது. முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் மீது இருந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் அடிப்படையில் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Image Caption

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ்.

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க