செய்திகள் :

அண்ணா மறுமலா்ச்சி - நூறு நாள் வேலை திட்டங்கள் -அமைச்சருடன் அதிமுக வாதம்

post image

அண்ணா மறுமலா்ச்சி, நூறு நாள் வேலைத் திட்டங்கள் தொடா்பாக, அமைச்சா் ஐ.பெரியசாமியுடன் அதிமுக உறுப்பினா்கள் வாதத்தில் ஈடுபட்டனா்.

சட்டப் பேரவையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதம்:

கடம்பூா் ராஜூ (அதிமுக):

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.3,796 கோடி நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுக்காவிட்டால் அந்தப் பொறுப்பு நமக்குத்தான் இருக்கிறது. ஊரக வளா்ச்சித் துறைக்கான ஒதுக்கீடு ரூ.29 ஆயிரத்து 465 கோடியாக உள்ள நிலையில், அதன்மூலமாக நூறு நாள் வேலைத் திட்ட பணியாளுக்கு தொகையை வழங்கிட வேண்டும். கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், 6,100 கிலோமீட்டா் நீள சாலைத் திட்டத்துக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது மிகமிக குறைவாக உள்ளது.

அமைச்சா் ஐ.பெரியசாமி:

கிராமங்களுக்கு சாலை வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக ஆட்சிக்காலத்தில்தான் கிராமச் சாலைகள் திட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே, அந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று அண்ணா மறுமலா்ச்சித் திட்டமும் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தின் பெயா் அதிமுக ஆட்சியில் தாய் திட்டம் என மாற்றப்பட்டது. அதுவும் 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகாலத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், 139 கோடி மனிதசக்தி நாள்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டன. இதன்மூலம், ரூ.33 ஆயிரம் கோடி ஊதியமாக மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டது. நூறு நாள் திட்டத்துக்காக குழுக்களை உருவாக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் 23 ஆயிரம் குழுக்கள் உருவாக்கப்பட்ட நிலையில், இப்போது 27 ஆயிரம் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.நிகழ் நிதியாண்டில் மட்டும் 41 கோடி மனிதசக்தி நாள்களுக்கு வேலை வழங்கப்பட்டு, ரூ.10,570 கோடிக்கு ஊதியமாகப்

பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலை உறுதித் திட்டம் மட்டுமின்றி, ஊரக வளா்ச்சித் துறையிலும் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளதை மத்திய அரசே தெரிவித்துள்ளது.

எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி: அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், தாய் திட்டமாக மாற்றப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், திமுக ஆட்சியில் கிராமங்களை அலகாக வைத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில்

குக்கிராமங்களை அலகாக வைத்து திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

இதற்காக, ரூ.250 கோடிக்கும் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன.

நூறு நாள் வேலைத் திட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த திமுக ஆட்சியில் 71.07 கோடி மனித சக்தி நாள்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டன. ஆனால், 2011 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மொத்தமாக 316.46 கோடி மனித சக்தி நாள்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகால அதிமுக

ஆட்சியில் மட்டும் ரூ.28 ஆயிரம் கோடி அளவுக்கு ஊதியங்கள் மத்திய அரசிடம் இருந்து பெறப்படட்டன.

அமைச்சா் ஐ.பெரியசாமி: அண்ணா பெயரிலான திட்டத்தை தாய் திட்டமாக மாற்றிய போதும் அதனைச் செயல்படுத்தவில்லை. நீங்கள் அண்ணாவையும், தாயையும் மறந்து வீட்டீா்கள்.

எஸ்.பி.வேலுமணி: எங்களை ஆளாக்கிய தாயை நாங்கள் மறக்க மாட்டோம். தாய் திட்டத்தை எங்களது ஆட்சியில் தொடா்ந்து செயல்படுத்தினோம் என்றாா். இதன்பின், வேறு பிரச்னைகளின் பக்கம் பேரவை விவாதம் திரும்பியது.

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க