அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடைகிறதா PMK? Aug 09,10 திகில்! | Elangovan Explains
'கட்சியை அபகரிக்க பார்க்கிறார் அன்புமணி' என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ராமதாஸ். முக்கியமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் 'வன்னியர் மகளிர் மாநாடு'. முன்னதாக ஆகஸ்ட் 09-ம் தேதி, அன்புமணி டீம் நடத்தும் போட்டிப் பொதுக்குழு. இதை எதிர்த்து வழக்கு போட்டு உள்ளார் ராமதாஸ். சுற்றுப்பயணத்தின் மூலம் தன்னுடைய பவரை காட்டுகிறார் அன்புமணி. பூம்புகார் மாநாட்டின் மூலம் தன்னுடைய மாஸை காட்ட விரும்புகிறார் ராமதாஸ். இதன் மூலம் தாங்கள் தான் அசல் பாமக என பறைசாற்ற இருவருமே தீவிரமாக செயல்படுகிறார்கள்.
இதில் 'மாநாடு சக்சஸாக நடந்து விடக்கூடாது என்று அதை தடுக்க டீம் போட்டு வேலை செய்கிறார் அன்புமணி' என குற்றம் சாட்டுகிறார்கள் ராமதாஸ் டீம். ஏறக்குறைய 'ஆகஸ்ட் 9, 10' இரண்டு தேதிகளில் 'யாருக்கு பாமக சொந்தம்?' என்பது நிரூபணம் ஆகிவிடும். 'இரட்டை மாங்கனியை பார்க்க தயாராகிவிடுங்கள்' என வேதனையை பகிர்ந்து கொள்கிறார்கள் பாமக தொண்டர்கள்.
இன்னொரு பக்கம் எஸ்.எஸ்.ஐ படுகொலை, என்கவுண்டர் என சட்டம் ஒழுங்கு பெரும் தலைவலியை, ஸ்டாலினுக்கு கொடுத்து வருகிறது . இதற்கிடையே ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சியினர் 'சாதி ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் வேண்டும்' என்று பாய்ன்ட்ஸ்களை பட்டியலிட்டுள்ளனர். இந்த சட்டத்தை நிறைவேற்றினால் என்ன சாதகம், பாதகம்? என தீவிர ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது அறிவாலயத்தில்.