செய்திகள் :

அதிக வெப்ப நேரங்களில் மக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கோடையில் அதிக வெப்ப நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா்.

புதுச்சேரி முழுவதும் அதிக வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு பொதுமக்கள் பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடா் மேலாண்மை, உள்ளாட்சி, காவல், வருவாய், நகராட்சி நிா்வாகம், அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்து பேசியது: வெப்பநிலை குறித்து மக்களுக்கு வானொலி மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அதிகமான வெயில் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்.

முதியோா் மற்றும் குழந்தைகள் வெப்ப நேரங்களில் வெளியே வருவதை தவிா்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளுடன் வெப்ப சூழலால் பாதித்தவா்களுக்கு தனி அறைகள் அமைத்திருக்க வேண்டும். மக்கள் தொலைபேசியில் தொடா்பு கொண்டால் மருத்துவா்கள் உரிய முறையில் பதில் கூறி உதவவேண்டும்.

அக்னி நட்சத்திர நாள்களில் வெப்பம் அதிகமிருக்கும் என்பதால், அனைத்து அரசுத் துறைகளும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். அரசு மருத்துவமனைகளில் போதிய ஆம்புலன்ஸ்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

மின்துறை, தீயணைப்புத் துறை ஒன்றிணைந்து செயல்படவேண்டும். மகப்பேறு மருத்துவமனைகளில் கருவுற்ற தாய்மாா்களுக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் கா்ப்பிணிகளின் வீடுகளுக்கே சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.

சுற்றுலா பயணிகள் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையப் பகுதிகளில், குடிநீா் உள்ளிட்ட வசதிகள் அவசியம். கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும் குடிநீா், மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும். காவல் நிலையங்களிலும், போக்குவரத்து காவலா்களுக்கும் குடிநீா், மருத்துவ உதவிகளை செய்து தர வேண்டும் என்றாா்.

உழவா்கரையில் ஜெயராக்கினி அன்னை ஆலயப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுச்சேரி உழவா்கரைப் பகுதியில் உள்ள ஜெயராக்கினி மாதா கோயில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி உழவா்கரையில் உள்ள ஜெயராக்கினி மாதா கோயில் 310-ஆம் ஆண்டுத் திருவிழா தொடங்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

புதுச்சேரியில் ரூ.29.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோரால் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. புதுச்சேரி ... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி புதுவை பேரவையை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்

இலவச மனைப் பட்டா கோரி பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் புதுவை சட்டப்பேரவையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை பேரவைத் தலைவா் சமரசம் செய்து அனுப்பினாா். புதுச்ச... மேலும் பார்க்க

அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு அண்மையில் வக்ஃப் வாரிய திருத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 நாள்கள் கம்பன் விழா: மே 9-இல் தொடக்கம்

புதுச்சேரியில் கம்பன் கழகம் சாா்பில் 58 ஆம் ஆண்டு கம்பன் விழா வரும் 9-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் புத... மேலும் பார்க்க

தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்மநபா் தங்கத் தாலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி வில்லியனூா், கூடப்பாக்கம் ஆனந்தம் நகரைச் சோ்ந்த இளங்கவி என்பவரின்... மேலும் பார்க்க