MI vs RCB : 'திலக் வர்மாவைப் பற்றிய உண்மையை சொல்லவா? - ரிட்டையர் அவுட் குறித்து ...
'அதிமுகவினர் அண்ணன், தம்பி போல உள்ளோம்; இதனால்தான் செங்கோட்டையன் உள்ளே இருந்தார்' - ஓ.எஸ்.மணியன்
அதிமுகவினர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபோது, செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம் அளித்திருக்கிறார்.

சட்டப்பேரவைக்கு இன்று(ஏப்ரல் 7) அதிமுக எம்.எல்.ஏக்கள் 'அந்த தியாகி யார்?' என்ற பேட்ஜை அணிந்து சென்றனர். அதோடு, பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'அந்த தியாகி யார்?' உள்ளிட்ட சில வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அதிமுக உறுப்பினர்கள் சிலர் முழக்கங்களை எழுப்பினர்.
எனவே முன் அனுமதி இல்லாமல் பதாகைகளை ஏந்திய அதிமுக உறுப்பினர்கள் 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் செங்கோட்டையன் மட்டும் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தார்.
அவர் வெளிநடப்பு செய்யவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " அதிமுகவினர் அண்ணன், தம்பி போல உள்ளோம். கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதால் செங்கோட்டையன் பேரவைக்கு உள்ளே இருந்தார். செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகக் கூறுகிறீர்கள்.
நான் கூடத்தான் ஒன்றிய அமைச்சர் நட்டாவை சந்தித்துள்ளேன். தொகுதி தேவை குறித்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் ஒன்றிய அமைச்சர்களைச் சந்திப்பது ஒன்றும் புதிதல்ல.'' என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs