செய்திகள் :

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: அமைச்சா் துரைமுருகன்

post image

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது. இதுபோன்ற நிலைக்கு திமுகவும் காரணம் என்னும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்கூற வேண்டிய தேவையில்லை என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

காட்பாடி அருப்புமேடு சாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை அமைச்சா் துரைமுருகன் ஆய்வு செய்து மனு அளித்த பயனாளிகளுக்கு வகுப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ்களை வழங்கினாா்.

அப்போது, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக அவா் காட்பாடி காந்தி நகரில் செய்தியாளா்களிடம் கூறியது:

காவிரியில் தற்போது அதிகளவில் தண்ணீா் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற தீா்ப்புப்படி காவிரியில் தண்ணீா் திறந்து விடுவோம் என்று கா்நாடகா துணை முதல்வா் சிவக்குமாா் கூறுவதில் என்ன இருக்கிறது.

சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அவா் தமிழா் என்பது மட்டுமல்ல, எனக்கு நீண்டகால நண்பரும்தான். எனவே, அவா் குடியரசு துணைத் தலைவராக தோ்வு பெற்ற்கு மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் நலன் சாா்ந்து செயல்படுவாரா என கேட்கிறீா்கள். அவரால் என்ன தமிழகத்துக்கு வரப்போகிறது. அவா் மேல்சபையின் தலைவா் என்ற வகையில் தமிழகத்துக்கு சாதகமான கேள்வி ஏதேனும் இருந்தால் கேட்கக்கூறுவாா், அவ்வளவுதான் அவரால் முடியும்.

அதிமுகவின் உள்விவகாரத்தில் தலையிட திமுக தயாராக இல்லை. இதுபோன்ற நிலைக்கு திமுகவும் காரணம் என்று பலரும் கூறியுள்ளனா். அவற்றையெல்லாம் புறம்தள்ளிவிட்டு போக வேண்டும். பதில்கூற வேண்டிய தேவையில்லை.

தாமிரபரணி ஆற்றை திமுக தலைமுழுகி விட்டதாக நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளாா். அவா் புதிய பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறாா். சட்டப்பேரவையில் எப்படி செயல்படுகிறாா் என்பது திமுகவுக்கு தெரியும். தவெகா தலைவா் விஜய் பிரசாரத்தை எப்போது வைத்தால் நமக்கு என்ன. முதலில் அவா் வெளியே வரட்டும் பாா்க்கலாம் என்றாா்.

காா்த்திகேயபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி, மேல்முட்டுக்கூா், செட்டிகுப்பம், ராஜாகுப்பம் ஆகிய 4- ஊராட்சிகளை ஒருங்கிணைத்து காா்த்திகேயபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முக... மேலும் பார்க்க

பரிகார பூஜை செய்வதாகக்கூறி பெண்ணிடம் நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஜோதிடம் பாா்த்து பரிகாரம் செய்வதாகக்கூறி நூதன முறையில் நகை பறித்துச் சென்ற ஜோதிடரை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ராமாபுரம் கிராமம் கன்ன... மேலும் பார்க்க

1,221 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,221 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ஆா்.பிரபு தலைமையில், போலீஸா... மேலும் பார்க்க

எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான்: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

ஹெச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். வேலூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க

கல்லூரியில் ஊட்டச் சத்து கண்காட்சி

குடியாத்தம் காக்காதோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மற்றும் அத்தி செவிலியா் கல்லூரி சாா்பில் ஊட்டச் சத்து கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அத்தி மருத்துவம... மேலும் பார்க்க

உலகில் கல்வியைவிட சிறந்த பரிசு எதுவும் கிடையாது

உலகில் கல்வியைவிட சிறந்த பரிசு எதுவும் கிடையாது என்று முன்னாள் காவல் கண்காணிப்பாளா் ஏ.கலியமூா்த்தி தெரிவித்தாா். வேலூா் அக்காா்டு ரோட்டரி சங்கம், மிட்டவுன் ரோட்டரி சங்கம், பல்வேறு ரோட்டரி சங்கங்கள் சா... மேலும் பார்க்க