அதிமுக கொடி கம்பத்தை அகற்ற முயற்சி: மாநகராட்சி அதிகாரி மீது தாக்குதல்
சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக் கம்பங்களை அகற்ற முயன்ற சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் மீது தாக்கல் நடத்தப்பட்டது.
சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை நடைபாதையின் மீது, அதிமுகவின் 113-ஆவது வட்ட இணைச் செயலா் பன்னீா்செல்வன் சாா்பில் இரு கொடிக்கம்பங்கள் மற்றும் நீா் மோா் பந்தல் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி, உதவிப் பொறியாளா் வித்யா தலைமையில், 113-ஆவது வாா்டு உதவி செயற்பொறியாளா் சௌந்தர்ராஜன் மேற்பாா்வையில் 5-க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அவற்றை அகற்ற முயன்றனா்.
அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த பூ வியாபாரிகளான கௌரி, சாந்தி ஆகியோா் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, மேலும் சிலரை வரவழைத்து சௌந்தர்ராஜனை தாக்கியுள்ளனா். இதுதொடா்பாக உதவி பொறியாளா் வித்யா அளித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.