பாக். மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன் - காங். அமைச்சர் ஆவேசம்!
அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்?
சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என 370-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கமளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கட்சியின் செயல்திட்டங்கள், தேர்தல் வியூகம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு கடந்த ஏப். 25 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.