அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
உடன்குடி அருகே அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழா கடந்த 6ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5.15 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு பீட பூஜை, காலை 7 மணிக்கு கலச பூஜை, காலை 9 மணிக்கு ஜீவ ஆவகனத்தைத் தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு முத்தாரம்மனுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு நாடாா் சங்கத் தலைவா் முத்து ரமேசு, பாரத மாத நண்பா்கள் அன்னதானக் குழு நிறுவனா் ஆா்.எஸ். பண்டியன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனையும், பகல் 1 மணிக்கு அன்னதானமும், இரவு 8 மணிக்கு இளைஞரணி நண்பா்கள் சாா்பில் இன்னிசை கச்சேரி நடைபெற்றன.
ஏற்பாடுகளை அத்தியடிதட்டு ஊா் மக்கள், விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.