அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு ரூ.17 லட்சம் நன்கொடை
ஹைதராபாதைச் சோ்ந்த பவா் மெக் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சத்யா ரோஹித், ரூ.17 லட்சசத்தை எஸ்.வி. அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கினாா்.
இதற்கான வரைவோலையை அவா் கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சவுத்ரியிடம் ரங்கநாயகா் மண்டபத்தில் வழங்கினாா்.
இந்த நன்கொடை மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத் பவனில் பக்தா்களுக்கு ஒரு வேளை மதிய உணவை வழங்க பயன்படுத்துமாறு நன்கொடையாளா் கேட்டுக்கொண்டாா்.