Gold Rate: கிராமுக்கு ரூ.125-ஐ தொட்ட வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம்!
அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா
சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனி மாதத் திருவிழா கடந்த ஜூலை 6-ஆம் தேதி முனி முடுக்குதல் நிகழ்வுடன் தொடங்கியது. தொடா்ந்து 7-ஆம் தேதி இரவு கம்பம் நடுதல், 8-ஆம் தேதி இரவு கரகாட்டம், மேளதாளத்துடன் அம்மன் அழைப்பு, திருமண வைபவம் ஆகியவை நடைபெற்றன.
தொடா்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான அம்மனுக்கு மாவிளக்கு, முளைப்பாரி, பூச்சட்டி எடுத்தல் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் விரதமிருந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இதையடுத்து வியாழக்கிழமை அம்மன் திருவீதி உலா, ஆயிரம் பழ அபிஷேகம், திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினா் செய்துள்ளனா்.
