செய்திகள் :

`அப்பாவுக்கு ரஜினி மாதிரி, எனக்கு ப்ரண்ட் இல்லைனு பொறாமைப்பட்டிருக்கேன்' - விஷ்ணு மஞ்சு ஷேரிங்க்ஸ்

post image
தெலுங்கு சினிமாவிலிருந்து மற்றுமொரு பீரியட் திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

அதுதான் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியிருக்கும் `கண்ணப்பா' திரைப்படம். விஷ்ணு மஞ்சு நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகன். `கண்ணப்பா' திரைப்படம் பேன் இந்தியா படமாக உருவாகி ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சென்னைக்கு வருகை தந்திருந்த விஷ்ணு மஞ்சுவை சந்தித்து இப்படம் தொடர்பாக ஒரு சாட் போட்டோம்.

```கண்ணப்பா' திரைப்படத்துல நாங்க என்னென்ன விஷயங்கள் எதிர்பார்க்கலாம்?”

``இந்தப் படம் பற்றி என்ன விஷயம் சொல்றதுனு தெரில. `கண்ணப்பா' திரைப்படம் என்னுடைய குழந்தை. கண்ணப்பாவின் கதை அனைவருக்கும் தெரியும். அவருடைய கதையை வித்தியாசமாக சொல்லலாம்னு நான் திட்டமிட்டேன். உண்மைகளை மாற்ற முடியாது. அதுனால அந்த உண்மைகளை அடிப்படையாக வச்சு ஒரு கதையை தயார் பண்ணினேன். அப்படிதான் படம் உருவாகியிருக்கு.”

Kannappa Still

``அக்‌ஷய் குமார், மோகன் லால், பிரபாஸ், காஜல் அகர்வால்னு படத்துல பலரும் கேமியோ பண்ணியிருக்காங்களே! கதைக்கு இத்தனை கேமியோகள் அவசியமாக இருந்துச்சா?”

``சரத்குமார் சார் இந்தப் படத்துல என்னுடைய தந்தையாக நடிச்சிருக்கார். அவர் திடமான உடலமைப்புக் கொண்டவர். இந்தப் படத்துல என்னுடைய தந்தையாக , ஒரு போர் வீரராக நடிக்கிறதுக்கு அவர் சரியா இருந்தாரு. காஜல் அகர்வாலும் நானும் நல்ல நண்பர்கள். அவள் பார்வதி தேவி கெட்டப்ல வந்து நின்னதும் என்னுடைய தாயை பார்க்கிற மாதிரியே இருந்தது. காஜல் இந்தப் படத்துல நடிக்கணும்னு அவசியமே இல்ல. எடிட் பார்த்துட்டு நான் முக்கியமாக காஜலுக்கு நன்றி சொன்னேன். இந்தப் படத்துல நடிச்சிருக்கிற பெரிய நடிகர்கள் அனைவரும் நட்புக்காகவும் , என் அப்பா மேல இருக்கிற மரியாதையாலும்தான் வந்து நடிச்சாங்க.

மோகன் லால் சாரை நான் இங்க சென்னைலதான் மீட் பண்ணி கதை சொன்னேன். அவர் எங்க குடும்ப நண்பர். அப்பா அவரை சந்திக்கிறதுக்கான ஏற்பாடுகளை பண்ணினாரு. நான் சென்னை வந்து அவர் நடிக்கவிருந்த கேரக்டர் பற்றி சொல்லிட்டு நியூசிலாந்துல நடக்கவிருந்த படப்பிடிப்புக்கு டேட் கேட்டேன். டேட் இல்லைனா இங்கேயே க்ரீன் மேட்ல ஷுட் பண்ணிடலாம்னு அவர்கிட்ட சொன்னேன். அவர் டேட் கேட்டுட்டு நியூசிலாந்துக்கு வர்றேன்னு உடனடியாக சொல்லிட்டாரு. அப்போதே அவர் கால்ல விழுந்து நான் நன்றி சொல்லிட்டேன். மோகன் லால் சார், சரத்குமார் சார், என்னுடைய அப்பா போன்றவர்கள் முன்னாடி நான் நடிச்சது என் வாழ்க்கையில நான் பண்ணின புண்ணியத்துக்கு கிடைச்ச பலன். பிரபாஸும் நானும் நல்ல நண்பர்கள். சொல்லப்போனால், என்னைவிட என் அப்பாகூடதான் பிரபாஸ் நெருக்கம். அவர் மேல இருக்கிற மரியாதையினால உடனடியாக நடிக்கிறதுக்கு பிரபாஸ் ஒத்துகிட்டாரு.

இந்தப் படத்தின் மூலமாகதான் அக்‌ஷய் குமார் சார் தெலுங்கு சினிமாவுக்கு வந்திருக்கார். நான் அவர்கிட்ட முதல்ல கேட்டப்போ அவர் சின்ன கதாபாத்திரங்கள்ல நடிக்கிறது இல்லைனு சொல்லிட்டாரு. அதன் பிறகு அவர் படத்துக்குள்ள வந்ததுக்கு முக்கியக் காரணம் சுதா கொங்கரா மேம்தான். அப்பாவும் அவங்களும் பேசும்போது இந்தப் படத்துக்கு அவரை நான் தேடுறேன்னு அப்பா சுதா மேம்கிட்ட சொன்னாங்க. `அந்த கதாபாத்திரம் நல்லா இருக்கும். நான் அக்ஷய் குமார்கிட்ட சொல்றேன்'னு சுதா மேம் அப்புறம் அக்‌ஷய் குமார் சார்கிட்ட சொன்னாங்க. அவரும் நடிக்கிறதுக்கு ஒத்துகிட்டாரு.

முன்னாடி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா சிவன் கதாபாத்திரத்துல நடிச்சிருப்பார். அது அவருக்கு பொருத்தமாக இருக்கும். அவருக்குப் பிறகு சிவனாக நடிச்ச எந்த நடிகரும் ஐகானிக் வடிவத்துல மனசுல பதியல. இந்த சிவன் கதாபாத்திரத்துக்கு நான் நினைச்ச மாதிரியே சரியாக அக்ஷய் குமார் சார் பொருந்தியிருந்தார்.”

``உங்களுடைய கரியர்ல உங்களுக்கு ப்ரேக் கொடுத்த திரைப்படம் `தீ'! அந்தப் படம் உங்களுக்குக் கொடுத்த விஷயங்கள் என்னென்ன?”

``அந்தப் படம்தான் என்னுடைய முதல் வெற்றி. அந்தப் படம்தான் எனக்கு நல்ல நடிகன் என்கிற பெயரையும் பல விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. அந்தப் படம் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்துச்சு. அதுக்கு முன்னாடி நான் பண்ணின இரண்டு படங்கள் சரியாகப் போகல. இந்த படமும் ஓடலைனா என்ன பண்றதுனு பல யோசனைகள் அப்போ இருந்தது. அதையெல்லாம் தாண்டி இந்த படம் ஹிட் அடிச்சு நம்பிக்கையைக் கொடுத்துச்சு. சொல்லப்போனால், விடாமுயற்சி ரொம்பவே முக்கியம்னு இந்தப் படம் எனக்கு கத்துக் கொடுத்துச்சு.”

நானி

``இந்தப் படத்துல நானி உதவி இயக்குநராக வேலை பார்த்தார்னு நாங்க கேள்விப்பட்டோமே!”

``ஆமா, கடைசி கட்டத்துல அவரும் இந்தப் படத்துல வந்து வேலை பார்த்தாரு. சினிமா துறை ஒரு குடும்பத்துக்கும், ஒரு தனி நபருக்கும் கிடையாவே கிடையாது. அதற்கு உதாரணம் நானி. இப்போவும் அவர்கூட பேசிட்டுதான் இருக்கேன். அதே மாதிரிதான் சிவகார்த்திகேயனும் வந்திருக்கார். டி.வி பக்கம் இருந்து சினிமாவுக்கு வந்து இன்னைக்கு பெரிய நடிகராக உருவெடுத்திருக்காரு. என்னுடைய அப்பாவும் சென்னைல பி.டி மாஸ்டராக இருந்தவர்தான். அவராகதான் தனியாக பெரிய உயரத்திற்கு வந்தார்.”

``உங்க அப்பாவும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். ரஜினியுடனான நட்பு பற்றி அப்பா வீட்டுல பேசுவாரா?”

``அவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற நட்பைப் பற்றி அவங்க சொல்லி தெரிய வேண்டியதில்லை. பார்க்கும்போதே அவர்களுக்குள்ள இருக்கிற நட்பு பற்றி தெரிஞ்சிடும். ஆனா ஒரு விஷயம். அப்பாவுக்கு ரஜினி சார் மாதிரி எனக்கு சினிமாவுல நண்பர்கள் இல்லைனு நான் பொறாமைப்பட்டிருக்கேன்.”

Vishnu Manchu

``தமிழ் உட்பட பிற மொழி படங்களை ரீமேக் பண்ணியிருக்கீங்க! ரீமேக் பற்றிய உங்களின் பார்வை?”

``முன்னாடிலாம் ரீமேக் படங்கள் பயங்கரமாக ஹிட் அடிச்சது. இப்போ ரீமேக் படங்கள் வொர்க் அவுட் ஆகுமானு கேட்டால் கேள்விக்குறிதான். ஓ.டி.டி தளங்களோட வளர்ச்சிக்குப் பிறகு பலரும் பிற மொழி படங்கள் பார்க்க தொடங்கிட்டாங்க. தமிழ் படங்கள் தெலுங்குல ரீமேக் பண்ணினது பயங்கரமாக ஹிட் அடிச்சிருக்கு. தெலுங்கு படம் தமிழ்ல ரீமேக் பண்ணினது தமிழ்ல பெரிய ஹிட் ஆகியிருக்கு. நான் சூர்யா சார் நடிச்ச `காக்க காக்க' படத்தை தெலுங்குல ரீமேக் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். அந்தப் படத்தை தெலுங்குல வெங்கடேஷ் சார் பண்ணியிருந்தார். இயக்குநர் அமீர் சார் `தீ படத்துக்குப் பிறகு பருத்திவீரன் படத்துல நான் நடிச்சால் நல்ல இருக்கும்'னு ஒரு பேட்டியில சொல்லியிருந்தாரு. அது எனக்கு கிடைச்ச பாராட்டு.

அதே மாதிரி `காதல்' திரைப்படத்தை ரீமேக் பண்ணனும்னு எனக்கு அனுப்பினாங்க. அந்தப் படத்தை தெலுங்குல ரீமேக் பண்ணினால் மாறிடும்னு சொல்லிட்டேன். அந்தப் படம் தெலுங்கு டப்ல பெரிய ஹிட் அடிச்சது. சமீபத்துல `மகாராஜா' திரைப்படம் பார்த்தேன். அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. அந்தப் பட பார்த்தப் பிறகு இயக்குநர் நித்திலன்கிட்ட பேசினேன்.”

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

porsche Car: `இது தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் அன்புப் பரிசு...' - தமன் குறித்து பாலய்யா நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் அவ்வப்போது எண்ட்ரி கொடுத்தாலும், தெலுங்கு சினிமாவின் உச்சத்தில் வலம் வருபவர் இசையமைப்பாளர் தமன்.பிரபல தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின், சமீத்திய திரைப்படங்களான 'Akhanda, Veer... மேலும் பார்க்க

''எங்க காதல் சேராதுன்னு நினைச்சேன்; ஆனா, அந்த ஹாஸ்பிடல்ல இருந்தப்போ...'' - நடிகை ஜீவிதா ராஜசேகர்

சொல்லாத காதல் சொர்க்கத்துல சேராதுன்னு சொல்வாங்க. 'இதுதான்டா போலீஸ்' நடிகர் டாக்டர் ராஜசேகரும், அவர் மனைவி நடிகை ஜீவிதாவும் ஒருத்தரையொருத்தர் மனசுக்குள்ள 6 வருஷமா லவ் பண்ண, இனி சேரவே முடியாதுங்கிற ஒரு ... மேலும் பார்க்க

Chiranjeevi: 'பேத்தி வேண்டாம்; ஹாஸ்டல் மாதிரி இருக்கு' - சர்ச்சையைக் கிளப்பிய சிரஞ்சீவி பேச்சு

நடிகர் சிரஞ்சீவி பெண் குழந்தைகள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கு மட்டுமின்றி கன்னடம், இந்தி போன்ற மொழிகள... மேலும் பார்க்க

Thandel: "கலைக்கு நீ ஆற்றும் அர்ப்பணிப்பு..." - மகன் நாக சைதன்யாவைப் பாராட்டிய நாகர்ஜுனா

‘தண்டேல்’ படம் பார்த்த நாகார்ஜுனா படக்குழுவினரையும், மகன் நாக சைதன்யாவையும் பாராட்டி இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டுநாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர... மேலும் பார்க்க

Darshan: ``என்னை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள்..." - ரசிகர்களிடம் நடிகர் தர்ஷன் வேண்டுகோள்!

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரின் ரசிகர் ரேணுகாசாமி என்பவரைக் கொலை செய்தக் குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரின் காதலி நடிகை பவித்ராவும் கைது செய்யப்பட்டு சிறையில்... மேலும் பார்க்க

``நான் ஏன் குற்றவாளியைப் போல நடத்தப்பட வேண்டும்!'' - எதிர்மறையான விமர்சனங்களுக்கு நாக சைதன்யா பதிலடி

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது `தண்டேல்'.நாக சைதன்யா - சமந்தா தம்பதி தங்களின் திருமண வாழ்விலிருந்து விலகிக் கொள்வதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தனர். இச... மேலும் பார்க்க