செய்திகள் :

அமித் ஷாவுடன் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆலோசனை!

post image

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று(ஆக. 23) ஆலோசனை மேற்கொண்டார்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், புது தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த சி.பி. ராதாகிருஷ்ணன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.

அமித் ஷாவுடன் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நெல்லையில் வெள்ளிக்கிழமை(ஆக. 22) நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி அளவிலான கூட்டத்தில் பங்கேற்க தமிழக வந்திருந்த அமித் ஷா, சி .பி . ராதாகிருஷ்ணனைப் பற்றி குறிப்பிடுகையில், ‘அவர் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, தமிழ்நாடு பெருமிதம் கொள்வதற்கானதொரு விஷயம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி வேட்பாளராக தெலங்கானாவைச் சோ்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதா்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம், தோ்தலில் தென்னிந்தியாவை சோ்ந்த இருவருக்கு இடையே போட்டி உறுதியாகியுள்ளது.

NDA's VP candidate CP Radhakrishnan meets Amit Shah in Delhi

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சு தொடா்கிறது: எஸ்.ஜெய்சங்கா்

‘அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிட்ட ‘சிவப்பு கோடுகளை’ இந்தியா கொண்டுள்ளது. அதாவது, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளா்களின் நலனைப் பாதுகாப்பதில் சமரசம் செய்ய மு... மேலும் பார்க்க

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வா் பகவந்த் மான், ‘எனத... மேலும் பார்க்க

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’: காங்கிரஸ்

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட... மேலும் பார்க்க

இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்திட்டத்தில் பரிந்துரை

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்... மேலும் பார்க்க

சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் ஹரியாணா புறப்பாடு

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட... மேலும் பார்க்க

விரைவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்படும்: மத்திய அமைச்சா்

‘லண்டன் உலோக வா்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வா்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா். இந்திய பங்குச் சந்தை ஒ... மேலும் பார்க்க