அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார் ஆந்திர முதல்வர்!
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தனது இரண்டு நாள் தில்லி பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல்வேறு மத்திய அமைச்சர்களைச் சந்திக்க உள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தில்லி வந்துள்ளது ஆந்திர முதல்வர், தனது பயணத்தின் முதல் நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தில்லி மெட்ரோ நிர்வாக இயக்குநர் விகாஸ் குமார் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. சரஸ்வத் ஆகியோரைசந்திக்க உள்ளார்.
முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் நினைவு நிகழ்வில் சந்திரபாபு நாயுடு உரையாற்ற உள்ளார்.
தனது பயணத்தின் இரண்டாவது நாளில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர்கள் மன்சுக் எல். மாண்டவியா, சி.ஆர். பாட்டீலை சந்திக்க உள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.