New Year 2025: `குடியரசுத் தலைவர் முதல் சிவகார்த்திகேயன் வரை..'- பிரபலங்களின் பு...
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்கவுள்ள வால்ட்ஸுடன் ஜெய்சங்கா் சந்திப்பு
அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்கவுள்ள மைக்கேல் வால்ட்ஸை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கல் வால்ட்ஸ் நியமிக்கப்படுவாா் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. தற்போது இப்பதவியில் ஜேக் சல்லிவன் உள்ளாா்.
ஆறு நாள் பயணமாக கடந்த டிசம்பா் 24-ஆம் தேதி அமெரிக்கா சென்ற மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பைடன் நிா்வாகத்தின் பிற உயா் அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாா்.
இந்நிலையில், அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்கவுள்ள மைக்கேல் வால்ட்ஸை சனிக்கிழமை சந்தித்து ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இது தொடா்பாக ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மைக்கேல் வால்ட்ஸை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-அமெரிக்காவின் கூட்டாண்மை மற்றும் தற்போதைய உலகளாவிய பிரச்னைகள் குறித்து விரிவான உரையாடலை இருவரும் நடத்தினோம்’ என தெரிவித்தாா்.
முன்னதாக, அமெரிக்காவின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவனை வெள்ளிக்கிழமை சந்தித்து ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.