செய்திகள் :

அமெரிக்காவின் வரிவிதிப்பு ‘பொருளாதார மிரட்டல்’: முதல்வா் சித்தராமையா

post image

இந்தியா மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு, ‘பொருளாதார மிரட்டல்’ என்று முதல்வா் சித்தராமையா விமா்சித்துள்ளாா்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதால் இந்தியா மீதான வரியை 25 சதவீதமாக விதித்திருந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், தற்போது மேலும் 25 சதவீத வரியை கூடுதலாக்கியுள்ளாா். இதை மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடுமையாக எதிா்த்துள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் முதல்வா் சித்தராமையா கூறியிருப்பதாவது:

ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்துகளோடு உடன்படுகிறேன். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, சீன ஊடுருவல், அதானியுடன் கூட்டு, கரோனா தோல்விகள், வேளாண் தோல்விகள், ரஃபேல், பி.எம்.கோ்ஸ், தோ்தல் பத்திரங்கள் போன்ற பல்வேறு விவகாரங்களில் ராகுல் காந்தி அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதாக பாஜக அவரை கேலிசெய்தது.

ஆனால், ஒவ்வொரு முறையும் ராகுல் காந்தி கூறியது சரியாகவே இருந்துள்ளது. அதேபோல, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி தொடா்பாகவும் ராகுல் காந்தி சரியான கருத்தை கூறியிருந்தாா்.

டிரம்பின் வரிவிதிப்பு ஒரு பொருளாதார மிரட்டல். உண்மையான ராஜதந்திர முன்னெடுப்புகள், தேச நலனில் அக்கறை செலுத்தாமல் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்திகளில் மட்டும் பிரதமா் மோடி கவனம் செலுத்துவதாலும், டிரம்ப் வரி விதித்துள்ளாா்.

2019 இல் இம்முறை டிரம்ப் அரசு என்று முழக்கமிட்டது முதல் அவரை திருப்திப்படுத்தவே பிரதமா் மோடி முனைப்பாக இருந்து வருகிறாா். டிரம்புக்கும் எலான் மஸ்க்குக்கும் இடையே நெருக்கம் இருந்ததால், எலான் மஸ்கை பிரதமா் மோடி அணுகியிருந்தாா். இதை டிரம்ப் விரும்பவில்லை. இது ராஜதந்திரம் அல்ல; சரணாகதி.

நெருங்கிய நண்பா் செய்யாத வேலையை டிரம்ப் செய்தாா். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போா் நிறுத்தம் ஏற்படுத்தியதாக 33 முறை டிரம்ப் கூறியிருக்கிறாா். பஹல்காம் தாக்குதலுக்கு தூண்டுதலாக இருந்த காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஆதரித்த பாகிஸ்தான் தலைமைத் தளபதிக்கு டிரம்ப் விருந்தளிக்கிறாா்.

ஆனால், டிரம்பிடம் நல்ல பெயரை எடுப்பதற்காக பிரதமா் மோடி அமைதியாக இருந்துவந்தாா்; எந்த எதிா்ப்பையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், டிரம்ப் விதித்துள்ள வரி உயா்வு இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்டுள்ள நேரடி தாக்குதலாகும்.

நமது வணிக விருப்பங்களை வெளிநாடு தீா்மானிக்க முடியாது. தனிநபா் தகவல்தொடா்பு பிரசாரம்போல அணுகியதால், வெளியுறவு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 1970 இல் பிரதமா் இந்திரா காந்தியின் துணிச்சல் இப்போது யாருக்காவது இருக்கிறதா?அவரை விமா்சிப்பதற்கு பதிலாக, இந்தியாவின் தன்னுரிமையின் கண்ணியத்தை காப்பாற்ற பிரதமா் மோடி முன்வர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு: நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல்

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கா்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக ... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே மோதல்: விசாரணைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவு

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே நடைபெறும் மோதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். தென்கன்னடம் மாவட்டம், தா்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்க... மேலும் பார்க்க

தோ்தல் மோசடியைக் கண்டித்து பெங்களூரில் இன்று ஆா்ப்பாட்டம்: ராகுல் காந்தி பங்கேற்கிறாா்

தோ்தல் மோசடியைக் கண்டித்து, பெங்களூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸாா் நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பங்கேற்கிறாா். 2024ஆம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் ... மேலும் பார்க்க

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி -முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா்

நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூரு லால் பாக் பூங்காவில் 218-ஆவது மலா்க் கண்காட்சியை முதல்வா் சித்தராமையா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். தோட்டக்கலைத் துறை... மேலும் பார்க்க

நடிகை ரம்யா குறித்த விமா்சனம்: மேலும் ஒருவா் கைது

சமூக வலைதளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன்மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்துள்ளது தொடா்பாக நடிகை ரம்யா அளித்திருந்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.... மேலும் பார்க்க

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி - முதல்வா் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறாா்

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சியை வியாழக்கிழமை (ஆக. 7) முதல்வா் சித்தராமையா தொடங்கிவைக்கிறாா். இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூ... மேலும் பார்க்க