செய்திகள் :

அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் வலியுறுத்தலா? அச்சுறுத்தலா?

post image

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டறிந்தார்.

அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்ப் உள்பட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் சுந்தர் பிச்சை (கூகுள்), சத்யா நாதெல்லா (மைக்ரோசாஃப்ட்), மார்க் ஸூக்கர்பெர்க் (மெட்டா), சாம் ஆல்ட்மேன் (ஓபன்ஏஐ), டிம் குக் (ஆப்பிள்) ஆகியோருடன் அதிபர் டிரம்ப் கலந்துரையாடினார். இந்த விருந்தின்போது, அமெரிக்காவில் அந்நிறுவனங்களின் முதலீடு குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம், நீங்கள் எவ்வளவு முதலீடு செய்யவுள்ளீர்கள்? அது ஒரு பெரிய தொகை என்று எனக்கு தெரியும் என்று டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த டிம் குக், அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாகக் கூறினார். மேலும், அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்ததற்காக டிரம்ப்புக்கு நன்றியும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க்கிடம் முதலீடு குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பினார். மெட்டாவும் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாகக் கூறினார்.

இரவு விருந்தில் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் டிரம்ப்

கூகுள் முதலீடு குறித்து பதிலளித்த சுந்தர் பிச்சை, வடக்குப் பகுதிகளில் 100 பில்லியன் டாலர் செய்கிறோம். அமெரிக்காவில் அடுத்த 2 ஆண்டுகளில் 250 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளோம் என்று தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட்டின் முதலீடு 75 பில்லியன் முதல் 80 பில்லியன் டாலர் என்று அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறினார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்து, அவற்றை அமெரிக்காவில் விற்பனை செய்வதை ஏற்க முடியாது என்று அதிருப்தியுடன் எதிர்ப்பும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் உற்பத்தி செய்து, அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் மீது 25 சதவிகித வரியையும் கடந்த மே மாதம் அறிவித்தார்.

இந்த நிலையில்தான், நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் டிரம்ப் கலந்துரையாடியுள்ளார்.

US President Trump hosts tech titans, asks Apple CEO to invest in US

புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!

‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுந... மேலும் பார்க்க

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

உக்ரைனில் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவி ரஷியா ஞாயிற்றுக்கிழமை(செப். 7) தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் ரஷியா ராணுவ படையெடுப்பை தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், அதன்பின் நடத்தப்ப... மேலும் பார்க்க

காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிர்சியில் ஈடுபட்டுள்ளன. இவ்விரு நாடுகளின் சாகர்மாதா நட்புறவுக் கொல்கையின்கீழ், ஐந்தாம் ஆண்டாக இந்த ராணுவப் பயிற்சி நிகழ்ச்சி இன்... மேலும் பார்க்க

ஜப்பான் பிரதமர் ராஜிநாமா!

பிரதமர் மோடி ஜப்பான் சென்று பேச்சுவார்த்தை நடத்திய 10 நாள்களுக்குள் அந்நாட்டின் பிரதமர் ஷிகேரு இஷிபா ராஜிநாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பானுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பாடகி மீது கரடி தாக்குதல்

பாகிஸ்தான் பாடகி குராத்துலைன் பலூச் மீது கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பிரபல பாடகியாக அறியப்படுபவர் குராத்துலைன் பலூச். இவர் பல்டிஸ்தானில் உள்ள கிராமங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். பாகிஸ்தானின் பஜாவூர் மாவட்டத்தில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண... மேலும் பார்க்க