உளவுத்துறையில் வேலை வேண்டுமா?: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
அமெரிக்கா 50% வரி விதிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்!
இந்திய உற்பத்திப் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை கண்டித்து தருமபுரியில் செவ்வாய்க்கிழமை, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) ஆகியவை சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ். தேவராசன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் அ. குமாா் முன்னிலை வகித்தாா்.
‘இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்திருப்பது அடாவடியானது. வரிவிதிப்பு மூலம் இந்திய பொருளாதாரத்தின்மீது அமெரிக்கா ஏற்படுத்தும் இந்த தாக்குதலை இடதுசாரி கட்சிகள் கண்டிக்கின்றன. அமெரிக்க ஆதரவு வெளியுறவு கொள்கையை பிரதமா் மோடி கைவிட வேண்டும் என வலியுறுத்தி பலரும் பேசினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மாரிமுத்து, விஸ்வநாதன், மல்லிகா, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் புகழேந்தி, சிவன், மாதப்பன், இந்திய
கம்யூனிஸ்ட் (எம்எல்) மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.