அமலாக்கத் துறை வழக்குகள் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை: காங்கிரஸ் அகில இந்திய நி...
அமெரிக்க துணை அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி!
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 21) சந்தித்தார்.
தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்ற ஜே.டி. வான்ஸை பிரதமர் வரவேற்றார்.
இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வணிக ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் அவர்களின் பேச்சுவார்த்தைகளில் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் 4 நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகைப் புரிந்துள்ளார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமான நிலையத்தில், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை வரவேற்றார். வான்ஸின் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், குழந்தைகள் இந்திய பாரம்பரிய உடை அணிந்திருந்தனர்.
துணை அதிபருக்கு விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க | இந்திய பாரம்பரிய உடையில் அமெரிக்க துணை அதிபரின் குழந்தைகள்!