செய்திகள் :

அமெரிக்க பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை - திருச்சி இன்ஜினீயர் சிக்கிய பின்னணி!

post image

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் கொடுத்த புகாரில், இந்திய குடிமகன் ஒருவர், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இணையதளத்தில் பின்தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கு சமூகவலைதளங்கள் மூலம்தான் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது திருச்சியைச் சேர்ந்த 37 வயதான கிஃப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இந்தக் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

லேப் டாப், செல்போன்

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட கிஃப்ட் ஜேசுபாலன், திருச்சியைச் சேர்ந்தவர். இவரின் அப்பா ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர் கோவையில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். அதனால் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்திருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இவரின் அப்பாவும் இறந்துவிட்டார். அதனால் வீட்டில் வயதான அம்மாவுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். ஒய்வூதியம் மூலம் வாழ்ந்து வந்த கிஃப்ட் ஜேசுபாலனின் லைஃப் ஸ்டைல் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை அதிகளவில் பார்த்து அதற்கு ஒருகட்டத்தில் அடிமையாகியிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் தலைமை பதவியிலிருக்கும் பெண் ஒருவரின் சமூக வலைதளத்தை கிஃப்ட் ஜேசுபாலன் பாலோ செய்து வந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக அந்த அமெரிக்க பெண் அதிகாரிக்கு ஆபாச வீடியோ மற்றும் பாலியல் ரீதியான மெசேஜை அனுப்பி வந்திருக்கிறார். அதை நிராகரித்து வந்த பெண் அதிகாரி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்த அவர், அமெரிக்க தூதரகத்துக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் எங்களுக்கு புகார் வந்தது. ஐபி அட்ரஸ் மூலம் கிஃப்ட் ஜேசுபாலனைக் கைது செய்திருக்கிறோம்" என்றனர்.

'அந்த பொண்ணுக்கு 3 முறை நிச்சயம் ஆகிருக்கு; எல்லாமே மோசடி' - இருட்டுக்கடை உரிமையாளர் சம்பந்தி

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கனிஷ்கா தன் மாமனார் யுவராஜ் சிங் மற்றும் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: 'குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை'- தற்கொலை நாடகமாடிய தாய்-மகள் கைது!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கணவனை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய சம்பவத்தில் தாய்-மகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போல... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் தண்டால்; சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோ- இளைஞரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே தாமரை குட்டி விளைபகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்ட... மேலும் பார்க்க

`பணம் திருடியதாக சந்தேகம்’ வேதனையில் 4வது மாடியில் இருந்து விபரீத முடிவெடுத்த கோவை மாணவி

கோவை நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் மருத்துவமனை இயங்கி வருகிறது. அவர்களுக்கு சொந்தமாக பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியும் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு திருவண்... மேலும் பார்க்க

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க