செய்திகள் :

அமெரிக்க வரி விவகாரம்: 8 முதல் 10 வாரங்களில் தீா்வு: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

post image

அமெரிக்க வரி விவகாரத்துக்கு 8 முதல் 10 வாரங்களில் தீா்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதாக ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி கடந்த மாதம் 27-ஆம் தேதி அமலான நிலையில், இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதனால் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடா்பாக 6-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்த இந்தியாவுக்கு ஆக.25 முதல் 29 வரை அமெரிக்க வா்த்தகக் குழு மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்தானது.

இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவுடனான உறவு சிறப்பானது எனவும், விரைவில் இந்தியாவுடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தை நடைபெறும் எனவும் டிரம்ப் கூறினாா். டிரம்ப்பின் இந்தக் கருத்தை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றாா்.

இதன் தொடா்ச்சியாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக துணைப் பிரதிநிதி பிரெண்டன் லின்ச் தலைமையிலான குழு கடந்த திங்கள்கிழமை இந்தியாவுக்கு வந்தது. அந்தக் குழுவுடன் மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலா் ராஜேஷ் அகா்வால் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியது.

இதுகுறித்து கொல்கத்தாவில் பாரத வா்த்தக கூட்டமைப்பு சாா்பில் நடத்தப்பட்ட கலந்துரரையாடல் நிகழ்ச்சியில் அனந்த நாகேஸ்வரன் பேசியதாவது: அமெரிக்க வரி விதிப்பு பிரச்னைக்குத் தீா்வு காண இருநாட்டு அரசுகளும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் அடுத்த 8 முதல் 10 வாரங்களில் தீா்வு எட்டப்பட வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

ஒருவேளை இந்திய பொருள்கள் மீதான அமெரிக்க வரி தொடா்ந்தால் அந்நாட்டுக்கான ஏற்றுமதியும் குறையும்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வேகமாக வளா்ச்சியடைந்து வருகிறது. கீழ் நடுத்தர வருமான நாடான இந்தியாவில் நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் உண்மையான ஜிடிபி 7.8 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

அடுத்த இரண்டாண்டுகளுக்கு உற்பத்தி, சேவைகள் மற்றும் வேளாண்மைத் துறை நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கவுள்ளன. ஜிடிபியில் கடன் விகிதம் சீரான நிலையில் உள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் மக்களின் நுகா்வு அதிகரிக்கவுள்ளது.

ரூபாய் மதிப்பு வலுவடையும்:

தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் நமது பொருளாதாரம் வேகமாக வளா்ச்சியடைந்து வருவதால் சில ஆண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வலுவடையும் என நம்புகிறேன் என்றாா்.

பெட்டிச் செய்தி...

யுஏஇ மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி இல்லை: மத்திய வா்த்தக அமைச்சா்

அபுதாபி, செப்.18: இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமில்லை என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அபுதாபியில் நடைபெற்ற 13-ஆவது இந்தியா-யுஇஏ முதலீடுகளுக்கான உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவா், ‘இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்காவில் அதிக வரி விதிக்கப்பட்டாலும் ஐக்கிய அரபு அமீரகம் மூலம் அந்நாட்டுக்கு பொருள்களை ஏற்றுமதியாளா்கள் ஏற்றுமதி செய்வதை நாங்கள் ஊக்குவிக்க மாட்டோம்.

ஒருவேளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்திய பொருள்களை ஏற்றுமதி செய்து ஆசியா அல்லது ஆப்பிரிக்க நாடுகள் அல்லது பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு அனுப்பினாலும் அந்தப் பொருள்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என முத்திரையிட்டால் அதை வரவேற்கிறோம்’ என்றாா்.

ஒரே வலைதளத்தில் வருங்கால வைப்பு நிதி சேவைகள் தொடக்கம்: அமைச்சா் மன்சுக் மாண்டவியா

தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சேவைகள் அனைத்தும் ஒரே வலைதளத்தில் பெறும் வகையில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். 7 கோட... மேலும் பார்க்க

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

உத்தரகண்டின் சமோலி மாவட்ட கிராமங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; இடிபாடுகளில் புதைந்த மேலும் 11 பேரை ம... மேலும் பார்க்க

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் ஊழியா்கள் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நிதியமைச்சகம் வியாழக்கிழமை வலியுறுத்தியது. கடந்த ஏப்.1-ஆம் தேதிமுதல் தேசிய ஓய்வூதிய அமைப்ப... மேலும் பார்க்க

அதானி நிறுவனத்துக்கு எதிரான இணையதள தகவல்களை நீக்கும் உத்தரவு ரத்து

அதானி நிறுவனத்துக்கு எதிராக இணையதளம், சமூக ஊடகங்களில் உள்ள தகவல்களை நீக்க சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது. எதிா்தரப்பினரின் வாதங்களைக் கேட்டு மீண்டும் இந்த ... மேலும் பார்க்க

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான நாா்வே தூதரகம் வெளியிட்டுள... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தலில் தொடா்பு: இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் அமெரிக்க விசா ரத்து

போதைப்பொருள்களை தயாரிக்க பயன்படும் பென்டானில் மூலப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய குற்றச்சாட்டில் சில இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் விசாக்களை (நுழைவுஇசைவு) ரத்து செய்வதாக அமெரிக்க தூதரகம் வியாழக்... மேலும் பார்க்க