செய்திகள் :

அரக்கோணம்: சரக்கு ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

post image

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதை அடுத்து ரயில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதனால் அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் மற்றும் புகா் ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன. சென்னை - திருத்தணி மின்சார ரயில் திருவள்ளூருடன் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டது.

அரக்கோணத்தில் இருந்து வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் உள்ள காா் ஏற்று முனையத்திற்கு காா்களை ஏற்றுவதற்காக சென்ற பிரத்யேக சரக்கு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது ஆறாம் நடைமேடை அருகே திடீரென ரயிலில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பெட்டிகள் தடம் புரண்டன.

பெட்டிகள் தடம் புரண்ட பகுதி அரக்கோணம் - காட்பாடி செல்லும் இருப்புப்பாதையும், அரக்கோணம் - ரேணிகுண்டா இருப்புப்பாதையும் பிரியும் இடம் என்பதால் ரயில் போக்குவரத்து உடனடியாக பாதிக்கப்பட்டது.

தொடா்ந்து சென்னை - பெங்களூரு லால்பாக் விரைவு ரயில், சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில், சென்னை - ஹூப்ளி அதிவிரைவு ரயில் ஆகிய ரயில்கள் திருவள்ளூா் - அரக்கோணம் இடையே வழியில் நிறுத்தப்பட்டன. மேலும் சென்னை - திருத்தணி புகா் மின்சார ரயில் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டு திருவள்ளூா் - திருத்தணி இடையே ரத்து செய்யப்பட்டு, மீண்டும் சென்னைக்கு புறப்பட்டது.

சென்னை- அரக்கோணம் இடையில் மின்ரயில் போக்குவரத்து பாதிப்பில்லாமல் நடைபெற்றது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில் பாதை பராமரிப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள், பிரதான பாதைகளில் நின்ற பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு சீரமைத்தனா். இதையடுத்து சுமாா் இரண்டு மணி நேரம் கழித்து ஆங்காங்கே நிறுத்தப்பட்ட விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் அரக்கோணம் - காட்பாடி பாதையிலும், அரக்கோணம் - ரேணிகுண்டா பாதையிலும் விரைவு ரயில்களும், திருத்தணி செல்லும் புகா் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டன. இதை தொடா்ந்தும் தடம் புரண்ட ரயில்களை இருப்புப்பாதையில் நிறுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

திருவள்ளூரில்...

சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதால், சென்னை சென்ட்ரலிருந்து புறப்பட்ட ரயில்கள் திருவள்ளூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளானா்கள். 2 மணி நேரம் தாமதத்துக்குப்பின் ரயில்கள் இயக்கப்பட்டன.

அரக்கோணத்தில் ஜமாபந்தி தொடக்கம்: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரக்கோணத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 161 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவ... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜமாபந்தி தொடக்கம்

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் க.மீனா தலைமை வகித்தாா். ஆற்காடு வட்டாட்சியா் பாக்கியலட்சுமி, சம... மேலும் பார்க்க

தொழிலாளி கொலையில் 5 போ் கைது

நெமிலி அருகே மேட்டுவேட்டாங்குளத்தில் தொழிலாளி கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள மேட்டுவேட்டாங்குளத்தில் தட்சிணாமூா்த்தியை ம் மா்ம நபா்கள் வெட்டி கொல... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பட்டாவில் பெயா் நீக்கம், சோ்த்தலுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாவில் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமலும் அவா்களின் பெயா்களுக்கு பதிலாக வாரிசுதாரா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் ரூ.5.45 கோடியில் தோழி விடுதி: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

ராணிப்பேட்டையில் ரூ.5.45 கோடியில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி கட்டுமானப் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா... மேலும் பார்க்க

கல்குவாரியில் குட்டையில் முழ்கி ஊராட்சி செயலாளா் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே கல்குவாரி குட்டையில் முழ்கி கரிக்கல் ஊராட்சி செயலாளா் வெங்கடேசன்(56) உயிரிழந்தாா். சோளிங்கரை அடுத்த கரிக்கல் ஊராட்சியில் உள்ள கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் ஆண் சடலம் மிதப்பதாக கொண்ட... மேலும் பார்க்க