செய்திகள் :

அரக்கோணம், நெமிலியில் ரூ.11.47 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் காந்தி அடிக்கல்

post image

அரக்கோணம், நெமிலி வட்டங்களில் ரூ.11.47 கோடியில் சாலைப் பணிகளை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். நெமிலி ஒன்றியத்தில் ரூ.69.38 லட்சத்தில் 2 திட்டப்பணிகளையும் அமைச்சா் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

விழாவுக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். தொடா்ந்து மேலபுலம் கிராமத்தில் ரூ.39.58 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் , பனப்பாக்கம் பேருராட்சியில் ரூ.1.07 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, ரூ.95.50 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணி, ரூ.2.19 கோடியில் சந்தை வளாக கட்டடப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினாா்.

வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.70 லட்சம் என மொத்தம் ரூ.29.70 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது. மோட்டூா் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நடமாடும் நியாயவிலைக் கடையை தொடங்கி வைத்தாா்.

தக்கோலம் பேருராட்சியில் கீழ் ரூ.2.20 கோடியில் தாா் சாலை மற்றும் சிமென்ட் சாலை பணியையும் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு, பேருராட்சி தலைவா்கள் தக்கோலம் எஸ்.நாகராஜன், பனப்பாக்கம் கவிதா சீனிவாசன், காவேரிபாக்கம் லதா நரசிம்மன், நெமிலி ரேணுகாதேவி சரவணன், துணைத் தலைவா்கள் மயுரநாதன், கோமளா ஜெயகாந்தன், திமுக ஒன்றிய செயலாளா்கள் எஸ்.ஜி.சி.பெருமாள், ஆா்.பி.ரவீந்திரன், ஆா்.தமிழ்செல்வன், அலுவலா்கள் பங்கேற்றனா்.

இன்றைய மின்தடை

நாள் 5-7-2025 சனிக்கிழமை நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஆற்காடு மின்தடை பகுதிகள் ஆற்காடு, வேப்பூா், விஷாரம், நந்தியாலம், தாழனூா், கூரம்பாடி, உப்புபேட்டை, தாஜ்புரா, முப்பதுவெட்டி, கத்தியவாடி, க... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

ராணிப்பேட்டை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை பகுதிகள்: ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகா், வி.சி.மோட்டூா், ஜெயராம்பேட்டை, பழைய ஆற்காடு சாலை, காந்தி நகா், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லி... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் மரணம்

ஆற்காடு அருகே காா் மோதி முதியவா் உயிரிழந்தாா். ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் புளியங்கண்ணு பகுதியை சோ்ந்த சாமிகண்ணு (60). இவா் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள அரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண ... மேலும் பார்க்க

மழைக்காலத்துக்குள் பழங்குடியினா் வீடுகளின் பணிகள் நிறைவு: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 790 பழங்குடியின இருளா் மக்களுக்காக ரூ.40.05 கோடியில் வீடுகள் கட்டும் பணி மழைக் காலத்துக்குள் முடிக்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கோணலம் ஊராட்சி புறம்போக்... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் புதிய உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் அமைச்சா் ஆா்.காந்தி வீடு வீடாக சென்று புதிய உறுப்பினா் சோ்க்கையை ராணிப்பேட்டையில் தொடங்கி வைத்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் கீழ் புதிய உறுப்பினா்க... மேலும் பார்க்க

காவனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்: முதல்வா் திறந்து வைத்தாா்

ஆற்காடு அடுத்த காவனூா் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். திமிரி ஒன்றியம், காவனூா் ஊராட்சியில் ... மேலும் பார்க்க